மாநில செய்திகள்

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை + "||" + Heavy rain in Thoothukudi; Holidays for schools - District Collector

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
தூத்துக்குடியில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்தார்.
தூத்துக்குடி,

வடகிழக்கு பருவமழை வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் தொடங்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று இரவு முதல் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக   மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்தார்.