தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும்; தமிழக அரசு அறிவிப்பு


தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும்; தமிழக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Oct 2019 3:50 PM GMT (Updated: 15 Oct 2019 3:50 PM GMT)

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் போனஸ் விவரங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.  இதன்படி, போக்குவரத்து கழகம், மின்வாரியம் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும்.

வீட்டு வசதி வாரியம், குடிநீர் வழங்கல், கழிவு நீரகற்று வாரிய ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும்.  பிற கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ் வழங்கப்படும்.  நிறுவனங்கள் ஒதுக்கும் உபரித்தொகைக்கு ஏற்ப 20% அல்லது 10% போனஸ் வழங்கப்படும்.

இதனால், நிரந்தர தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.8,400 மற்றும் அதிகபட்சம் ரூ.16,800 தீபாவளி போனஸ் வழங்கப்படும்.  போனஸ் வழங்குவதன் மூலம் அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் 3,48,503 பேர் பயன் அடைவார்கள்.

பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணை தொகை 11.37% வழங்கப்படும்.  லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை ஊழியர்களுக்கு உபரி தொகையை கணக்கில் கொண்டு 20% போனஸ் தரப்படும்.  நஷ்டம் அடைந்துள்ள பொதுத்துறை ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Next Story