வடகிழக்கு பருவமழை ஆய்வு பணிகளுக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்; தமிழக அரசு உத்தரவு


வடகிழக்கு பருவமழை ஆய்வு பணிகளுக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்; தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 16 Oct 2019 9:57 AM GMT (Updated: 16 Oct 2019 9:57 AM GMT)

வடகிழக்கு பருவமழையை கண்காணிக்கவும், ஆய்வு பணிகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு நாள் முன்னதாக இன்றே தொடங்கியுள்ளது.  தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என வானிலை மையம் அறிவித்து உள்ளது.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளவும், நிலைமையை ஆய்வு செய்யவும் மாவட்ட வாரியாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.  இதன்படி, மாவட்ட வாரியாக மொத்தம் 42 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.  காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு மட்டும் 11 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story