நீட் தேர்வால் பல மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது; மு.க. ஸ்டாலின்


நீட் தேர்வால் பல மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது; மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 16 Oct 2019 3:11 PM GMT (Updated: 16 Oct 2019 3:11 PM GMT)

நீட் தேர்வால் பல மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது என்று மு.க. ஸ்டாலின் பிரசாரத்தில் பேசியுள்ளார்.

நாங்குநேரி,

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் வருகிற 21ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் எதிர்க்கட்சியான தி.மு.க. விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. நாங்குநேரி தொகுதியை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு வழங்கி உள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக நா.புகழேந்தியும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரனும் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக மு.க. ஸ்டாலின் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.  அவர் மருதகுளத்தில் பேசும்பொழுது, நீட் தேர்வால் பல மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாக இருந்து வருகிறது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கூட, தமிழகத்தில் நீட் தேர்வை திணிக்க முயற்சித்தார்கள்.  ஆனால், அவர் அதை எதிர்த்தார்.  அவரை நாங்கள் பாராட்டுகிறோம். 

தமிழகத்தில் சுகாதாரம், ஊரக வேலைவாய்ப்பு மற்றும் முதியோர் உதவித்திட்டம் உட்பட பல அடிப்படை திட்டங்கள் எதுவும் முறையாக நடக்கவில்லை என்று பேசினார்.

Next Story