எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம்; எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வழங்குகிறது


எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம்; எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வழங்குகிறது
x
தினத்தந்தி 16 Oct 2019 11:40 PM GMT (Updated: 16 Oct 2019 11:40 PM GMT)

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது.

சென்னை, 

நிகர்நிலை பல்கலைக்கழகமான டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28-வது பட்டமளிப்பு விழா சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வருகிற 20-ந்தேதி நடைபெற உள்ளது. விழாவுக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமை தாங்குகிறார்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, விழாவில் பேசுகிறார்.

இதையடுத்து டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. டாக்டர் பட்டத்தை ஏ.சி.சண்முகம் மற்றும் ஏ.சி.எஸ்.அருண்குமார் ஆகியோர் இணைந்து வழங்குகிறார்கள். இதேபோல பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் (டி.ஆர்.டி.ஓ.) தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி, கங்கா ஆஸ்பத்திரியின் தலைவர் எஸ்.ராஜ சபாபதி, இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், நடிகை ஷோபனா சந்திரகுமார் ஆகியோருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

Next Story