மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் + "||" + Heavy Rain Likely in isolated places

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி, 

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விலகியுள்ள நிலையில், அதிக மழைப்பொழிவை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை நேற்று துவங்கியது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில்  அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தென்மேற்கு வங்கக் கடல், தென் தமிழகத்தை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த  5 நாட்களுக்கு பரவலாக கனமழை நீடிக்கும்.  இதேபோல் புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. புயல் பாதித்த பகுதிகளை வான்வழியே நாளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி
புயல் பாதித்த மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் பகுதிகளை வான்வழியே நாளை பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.
2. தென்மேற்கு பருவ மழை நிகழாண்டு இயல்பான அளவு இருக்கும்: வானிலை ஆய்வு மையம் கணிப்பு
தென்மேற்கு பருவ மழை நிகழாண்டு இயல்பான அளவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
3. மார்ச் முதல் மே மாதம் வரை வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்- இந்திய வானிலை ஆய்வு மையம்
இந்தியாவில் மார்ச் முதல் மே மாதம் வரை வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.