பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை, டீசல் விலை குறைவு


பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை, டீசல் விலை குறைவு
x
தினத்தந்தி 18 Oct 2019 2:38 AM GMT (Updated: 18 Oct 2019 2:38 AM GMT)

பெட்ரோல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணையிக்கப்பட்டு வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. 

இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் மாற்றமின்றி, ஒரு லிட்டர் ரூ.76.09 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் லிட்டருக்கு 11 காசுகள் குறைந்து ரூ.70.04 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.


Next Story