மாநில செய்திகள்

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க ஆளுநர் எதிர்ப்பு? + "||" + Tamil Nadu Governor Banwarilal Purohit against freeing seven Rajiv case convicts

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க ஆளுநர் எதிர்ப்பு?

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க ஆளுநர் எதிர்ப்பு?
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை முன் கூட்டியே விடுதலை செய்யும் வகையில் தமிழக அரசு சட்டப்பேரவையில் 2014-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் தெரிவித்திருந்தது. இதற்கிடையில், ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

2018- செப்டம்பரில் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய நிலையில், ஆளுநர் இதுவரை முடிவெடுக்கவில்லை. இந்த நிலையில், பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க தமிழக ஆளுநர் மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனது முடிவை முதல்வர் பழனிசாமியிடம், அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறிவிட்டதாகவும் பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.  அமைச்சரவையின் பரிந்துரை தொடர்பாக அரசுக்கு எழுத்துப்பூர்வமாக ஆளுநர் இதுவரை பதிலளிக்கவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் - மத்திய அரசு
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என மத்திய அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்து உள்ளது.
2. பேரறிவாளன் வழக்கு : சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி
தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், சிபிஐ புதிய அறிக்கை தாக்கல் செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.