மாநில செய்திகள்

நாங்குநேரியில் பணப் பட்டுவாடா புகார் -அறிக்கை கேட்டது தேர்தல் ஆணையம் + "||" + EC seeks Report from District election officer for complaints of giving money for voters

நாங்குநேரியில் பணப் பட்டுவாடா புகார் -அறிக்கை கேட்டது தேர்தல் ஆணையம்

நாங்குநேரியில் பணப் பட்டுவாடா புகார் -அறிக்கை கேட்டது தேர்தல் ஆணையம்
நாங்குநேரியில் நடந்த பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் ஆணையம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி, 

நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் எம்.பி.யாகி  இருப்பதால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதி காலியாக உள்ளது. இதற்கிடையே விக்கிரவாண்டி தொகுதியில்  தி.மு.க. எம்.எல்.ஏ. ராதாமணி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்ததால் அந்த தொகுதியும் காலி இடமாக இருந்தது. இந்த இரு தொகுதிகளுக்கும் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் நாராயணன், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன் போட்டியிடுகிறார்கள். விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ் செல்வன் தி.மு.க. சார்பில் புகழேந்தி போட்டியிடுகிறார்கள்.

நாங்குநேரியில் மொத்தம் 23 வேட்பாளர்களும், விக்கிரவாண்டியில் 8 வேட்பாளர்களும் உள்ளனர். கடந்த 2 வாரமாக 2 தொகுதிகளிலும் தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. இந்த தொகுதிகளில் அ.தி.மு.க.- தி.மு.க. கூட்டணி இடையே நேரடி பலப்பரீட்சை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இரு தொகுதிகளிலும் நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய உள்ளது. இதையடுத்து, நாளை மாலை 6 மணியுடன் வெளியூர்க்காரர்கள் வெளியேற வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாப் சாஹூ  உத்தரவிட்டுள்ளார். 

இதற்கிடையே, நாங்குநேரி தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது தொடர்பாக, நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம்  விரிவான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஷாகீன் பாக் பகுதியில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் ஷாகின் பாக் பகுதியில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.