அண்ணா அறிவாலயம் பஞ்சமி நிலம் என்றால் முறைப்படி நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


அண்ணா அறிவாலயம் பஞ்சமி நிலம் என்றால் முறைப்படி நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 18 Oct 2019 12:32 PM GMT (Updated: 18 Oct 2019 12:32 PM GMT)

அண்ணா அறிவாலயம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்றால் முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி,

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளில் பிரசாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

3 தொகுதிகளிலும் 21ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது.

இந்நிலையில் நாங்குநேரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட  அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

அண்ணா அறிவாலயம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்றால் முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும். ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராகவே நீடிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அவர் என்றும் முதலமைச்சராக முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story