மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரத்தை இழக்கிறது: என்ஜினீயரிங் கல்லூரிகளை அங்கீகரிக்க புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அரசின் பரிசீலனையில் இருப்பதாக தகவல் + "||" + Anna University loses power University of New Technology Information that is under consideration by the state

அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரத்தை இழக்கிறது: என்ஜினீயரிங் கல்லூரிகளை அங்கீகரிக்க புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அரசின் பரிசீலனையில் இருப்பதாக தகவல்

அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரத்தை இழக்கிறது: என்ஜினீயரிங் கல்லூரிகளை அங்கீகரிக்க புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அரசின் பரிசீலனையில் இருப்பதாக தகவல்
புகழ்பெற்ற நிறுவனம் என்ற அந்தஸ்தால் அண்ணா பல்கலைக்கழகம் தன்னுடைய அதிகாரத்தை இழக்கிறது. தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளை அங்கீகரிக்க புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை கொண்டுவர அரசு பரிசீலித்து வருகிறது.
சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 500-க்கும் மேற்பட்ட தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கான இணைப்பு அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது.


கடந்த 2018-19-ம் கல்வியாண்டு வரை மாணவர் சேர்க்கை யையும் அண்ணா பல்கலைக்கழகமே நடத்தி வந்தது. அதனைத் தொடர்ந்து 2019-20-ம் கல்வியாண்டில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மாணவர் சேர்க்கையை நடத்தியது.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புகழ்பெற்ற நிறுவனம் என்ற அந்தஸ்தை மத்திய அரசு வழங்கி இருக்கிறது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புகழ்பெற்ற நிறுவனம் என்ற அந்தஸ்து கிடைத்ததும், அது தனி நிறுவனமாக செயல்பட தொடங்கிவிடும். இதனால் அதன் கீழ் உள்ள இணைப்பு கல்லூரிகளை அங்கீகரிக்கும் அதிகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் இழக்கிறது.

எனவே அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள இணைப்பு கல்லூரிகளை அங்கீகரிக்க புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தேவை. அதுதொடர்பான முடிவுகள் அரசின் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த புதிய பல்கலைக்கழகத்தில் பிரத்யேக இணைப்பு மையம், பதிவாளர் மற்றும் தேர்வுகள் கட்டுப்பாட்டு அலுவலருக்கு தனி அலுவலகமும் செயல்படும். இதற்கான நடவடிக்கைகளை உயர்கல்வி துறையின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சென்னையில் மட்டுமோ அல்லது சென்னை, திருச்சி, சேலம் என்று 3 இடங்களிலோ கொண்டுவரவும் தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. அண்ணா பல்கலைக்கழகம் சாதனை : உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம் பிடித்தது
புகழ் பெற்ற குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (கியுஎஸ்) இளம் பல்கலைக்கழக தர வரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. தொடங்கி 50 ஆண்டுகளே ஆன பல்கலைக்கழகங்களை ஆராய்ந்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.