தமிழகத்தில் கொலை - கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


தமிழகத்தில் கொலை - கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 19 Oct 2019 12:27 PM GMT (Updated: 19 Oct 2019 12:27 PM GMT)

தமிழகத்தில் கொலை - கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி, மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் விக்கிரவாண்டி திமுக வேட்பாளர்  புகழேந்தியை ஆதரித்து இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

அதிமுக ஆட்சியில் தமிழகம் 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது. தமிழகத்தில் கொலை - கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 1996-ம் ஆண்டு ஜெயல‌லிதா மீது சொத்து குவிப்பு வழக்கு போட்டவர் சுப்பிரமணியசாமி தான், அதை முதலமைச்சர் திரித்து சொல்கிறார். அதிமுக ஆட்சியில் நடந்த சாதனைகள், திட்டங்கள் குறித்து முதலமைச்சரும், துணை முதலமைச்சரும்  பிரசாரத்தில் பேசத்தயாரா?.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story