2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெறுவோம்; அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெறுவோம்; அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 19 Oct 2019 1:00 PM GMT (Updated: 19 Oct 2019 1:00 PM GMT)

2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

நாங்குநேரி,

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.  இதனை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஜெயக்குமார் நாங்குநேரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாங்குநேரியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார் என கூறினார்.

தொடர்ந்து அடுத்து நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், சூழ்நிலைக்கேற்ப கூட்டணி முடிவு செய்யப்படும். கூட்டணியை கட்சியே முடிவு செய்யும்.  கடந்த 1972ம் ஆண்டில் இருந்து எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா என இரு பெரும் தலைவர்கள் எங்களுடைய கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.  அவர்களது முகம் எங்களுடைய வெற்றிக்கு உதவிடும்.

ஆண்ட கட்சி, ஆள போகிற கட்சி என்ற அடிப்படையில் அ.தி.மு.க.வே உள்ளது.  காங்கிரஸ் கட்சியானது தி.மு.க. மீது சவாரி செய்யும் கட்சி ஆகும்.  சட்டமன்ற இடைத்தேர்தலில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.  தி.மு.க. வீழ்ந்து கொண்டிருக்கிறது.  அ.தி.மு.க. வளர்கிறது என அவர் கூறினார்.

Next Story