மாநில செய்திகள்

“ஆவிகளை கண்டு பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல”- காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி + "||" + We are not afraid of spirits - Congress leader KS Alagiri

“ஆவிகளை கண்டு பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல”- காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

“ஆவிகளை கண்டு பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல”- காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
“ஆவிகளை கண்டு பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல” என்று நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது கே.எஸ்.அழகிரி கூறினார்.
நாங்குநேரி,

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகளின் தீவிர பிரசாரம் இன்று மாலையோடு நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று நாங்குநேரி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தின் போது, ஜெயலலிதாவின் மறைவில் மர்மம் இருப்பதாக ஸ்டாலின் பேசி வருவது வேடிக்கையானது என்றும் திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டு தான் ஜெயலலிதா மரணமடைந்தார் என்றும் கூறினார். 

மேலும் “ஜெயலலிதாவை வசைபாடிய ப.சிதம்பரம் உள்ளிட்டோரை அவரது ஆன்மா பழிவாங்கியுள்ளது. தொடர்ந்து பொய் பரப்புரை செய்து வரும் ஸ்டாலின் உள்ளிட்டோரையும் ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது” என்றார். 

இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று நாங்குநேரி தொகுதியில் பிரசாரம் செய்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “ஆவிகளை கண்டு பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல, ஆவிகளை விரட்டி அடிக்கும் சக்தி எங்களுக்கு உண்டு” என்று குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. தந்தை-மகன் இறந்த சம்பவம்: சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் கே.எஸ்.அழகிரி பேட்டி
தந்தை-மகன் இறந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என கே.எஸ்.அழகிரி கூறினார்.
2. மக்களின் துயரத்தை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
மக்களின் துயரத்தை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்று காங்கிரஸ் கட்சி மாநில தலைவர்கே.எஸ்.அழகிரி கூறினார்.
3. அரசியலில் ரஜினியின் முயற்சி வெற்றி பெறாது கே.எஸ்.அழகிரி பேட்டி
அரசியலில் ரஜினியின் முயற்சி வெற்றி பெறாது என கே.எஸ்.அழகிரி கூறினார்.
4. வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான வாய்ப்புகள் முழுமையாக இல்லை - கே.எஸ்.அழகிரி
2020-21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் கடன் சுமை காரணமாக வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான வாய்ப்புகள் முழுமையாக இல்லை என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
5. பாஜக விஜய்க்கு இலக்கு: ரஜினி போல, விஜய் கீழே விழுவாரா என்பது ஒரு வாரத்தில் தெரியும் - கே.எஸ்.அழகிரி
பாஜக விஜய்க்கு இலக்கு வைத்திருப்பதாகவும், ரஜினி போல, விஜய் கீழே விழுவாரா என்பது ஒரு வாரத்தில் தெரியும் என்று காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.