மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் + "||" + The rain will continue for the next 3 days in Tamil Nadu

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரு நாட்களுக்கு மிதமான மழை தொடரும்.  ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. கனமழை பெய்யும் இடங்களை ஆரஞ்சு நிறத்தில் குறிக்கிறோம். 

உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கும், நீலகிரி,கோவை, திண்டுக்கல், தேனியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சூறாவளி காற்று வீசுவதால் குமரி கடல், மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புவனகிரியில் 9 செ.மீ., மழையும், நாகர்கோவிலில் 8 செ.மீ., மழையும் பதிவாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் நெல்லை உள்பட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் நெல்லை உள்பட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.