இடைத்தேர்தலை முன்னிட்டு நாங்குநேரி, விக்கிரவாண்டியில் துணை ராணுவம் குவிப்பு


இடைத்தேர்தலை முன்னிட்டு நாங்குநேரி, விக்கிரவாண்டியில் துணை ராணுவம் குவிப்பு
x
தினத்தந்தி 20 Oct 2019 3:09 PM GMT (Updated: 20 Oct 2019 3:09 PM GMT)

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளதால் தேர்தல் பாதுகாப்பு பணியில் போலீசாரும், துணை ராணுவ படையினரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு நாளை (21-ந் தேதி) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில் பிரசாரத்திற்காக வந்திருந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பிரதான கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட வெளிநபர்கள் தொகுதிகளில் இருந்து வெளியேறினார்கள். வாக்குப்பதிவு நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை  நடைபெறும். 

நாங்குநேரி தொகுதியில் 2,57,418 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 170 மையங்களில் 299 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

விக்கிரவாண்டி தொகுதியில் 2,23,387 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக விக்கிரவாண்டி தொகுதில் 139 இடங்களில் மொத்தம் 275 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் பணிகளில் 1930 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் தேர்தல் பாதுகாப்பு பணியில்  போலீசார், துணை ராணுவ படையினர் மற்றும் அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பதட்டமான வாக்குச் சாவடிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நாளை மாலை வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். பதிவான ஓட்டுகள்  வருகிற 24-ந் தேதி (வியாழக்கிழமை) எண்ணப்படும்.

Next Story