சென்னையில் பெட்ரோல் 7வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை


சென்னையில் பெட்ரோல் 7வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை
x
தினத்தந்தி 21 Oct 2019 1:57 AM GMT (Updated: 21 Oct 2019 1:57 AM GMT)

சென்னையில் பெட்ரோல் 7வது நாளாக விலை மாற்றமின்றி இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.  கடந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.

இதனிடையே, சென்னையில் பெட்ரோல் விலை நேற்று தொடர்ந்து 6வது நாளாக லிட்டர் ஒன்றுக்கு ரூ.76.09 ஆகவும், டீசல் முந்தைய நாள் விலையில் இருந்து 7 காசுகள் குறைந்து ரூ.69.89க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் நேற்றைய விலையில் இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இதன்படி, பெட்ரோல் விலை தொடர்ந்து 7வது நாளாக லிட்டர் ஒன்றுக்கு ரூ.76.09க்கும், டீசல் ரூ.69.89க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Next Story