காலை 9 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி-12.84 % நாங்குநேரி-18.04 % வாக்குகள் பதிவு


காலை 9 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி-12.84 % நாங்குநேரி-18.04 % வாக்குகள் பதிவு
x
தினத்தந்தி 21 Oct 2019 4:38 AM GMT (Updated: 21 Oct 2019 4:38 AM GMT)

காலை 9 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி-12.84 %, நாங்குநேரி-18.04 % மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர்-9.66 % வாக்குகள் பதிவாகி உள்ளன.

நாங்குநேரி,

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறுகிறது.  வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.  இதன்படி, சென்னை, திருவள்ளூரில் சில பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருகிறது.  புதுச்சேரியிலும் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.  வாக்காளர்கள் மழையினிடையே வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

விக்கிரவாண்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 235வது எண் கொண்ட வாக்கு சாவடியில் இயந்திரம் ஒன்று பழுது ஏற்பட்டு ஒரு மணிநேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

இதனிடையே, காலை 9 மணி நிலவரப்படி விக்கிரவாண்டியில் 12.84 சதவீதம் வாக்குகளும், நாங்குநேரியில் 18.04 சதவீதம் வாக்குகளும் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் 9.66 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.

புதுச்சேரியில் காலை முதல் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.  இதனால் மக்கள் வாக்கு சாவடிகளுக்கு குறைவாக வருகை தந்துள்ளனர்.  இதனை முன்னிட்டு காலை 9 மணிவரை மிக குறைவான அளவில் வாக்குகள் பதிவாகி உள்ளன.

Next Story