மாநில செய்திகள்

இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு + "||" + Voting Ends in By elections

இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு

இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு
தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கான நேரம் முடிவு பெற்றது.
சென்னை,

தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. அதேபோல் புதுச்சேரி  காமராஜ் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெற்றது. 

நேற்று முன்தினம் மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில் பிரசாரத்திற்காக வந்திருந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பிரதான கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட வெளிநபர்கள் தொகுதிகளில் இருந்து வெளியேறினார்கள். 

வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெற்றது.  வாக்குப்பதிவு நேரம் முடிந்த போதிலும், 6 மணிக்கு முன்பாக வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்த இடங்களில் வாக்கு இயந்திரங்களில் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 24 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்
தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
3. தமிழகத்தில் புதிய அனல்மின் நிலைய பணிகளை துரிதப்படுத்த வேண்டும் - மத்திய மந்திரியிடம் கோரிக்கை
தமிழகத்தில் நடந்து வரும் அனல்மின் நிலைய பணிகளை துரிதப்படுத்த மத்திய மந்திரியை சந்தித்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
4. தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் நச்சுத்தன்மை அதிகம் உள்ளது : மத்திய அரசு
தமிழகத்தில் பாலில் நச்சுத்தன்மை அதிகமாக உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5. தமிழகத்துக்கு ரூ.710 கோடி முதலீடு திரட்டும் ஒப்பந்தம்: அமெரிக்காவில், ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் கையெழுத்து
அமெரிக்காவில் தமிழகத்துக்கு ரூ.710 கோடி முதலீடு திரட்டும் ஒப்பந்தம் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் கையெழுத்தானது.