மாநில செய்திகள்

குரூப்-2 தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்- டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு + "||" + Group 2 Syllubus pattern changed TNPSC

குரூப்-2 தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்- டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

குரூப்-2 தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்- டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு
குரூப்-2 தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
சென்னை,

குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தையும், தேர்வு முறையையும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) மாற்றி அமைத்து அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு தேர்வு எழுதும் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  

இந்த நிலையில், குரூப்-2 தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றி டி.ன்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதல் நிலைத்தேர்வில் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து கேள்விகள் கேட்கப்படும் என டி.ன்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. 

 முதல்நிலை தேர்வு திட்டத்தில், தமிழர் வரலாறு, பண்பாடு உள்ளிட்டவை குறித்து அதிகமான கேள்விகள் கேட்கப்படும். முதன்மைத் தேர்வு இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன, முதல் தாள் தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். 100 மதிப்பெண்களுக்கு, 25 மதிப்பெண்கள் கட்டாயம் பெறவேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது .  25 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே இரண்டாம் தாள் தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும்  என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.