மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் பருவமழை தீவிரமடையும் - சென்னை வானிலை ஆய்வு மையம் + "||" + Over the next 3 days in Tamil Nadu The monsoon intensifies Chennai Meteorological Department

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் பருவமழை தீவிரமடையும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் பருவமழை தீவிரமடையும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் பருவமழை படிப்படியாக தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையானது அடுத்த மூன்று தினங்களுக்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழையும், தென்தமிழக மாவ‌ட்டங்கள் மற்றும் நாகை, கடலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களிலும் கனமழையும் பெய்யக்கூடும். சென்னையிலும் நகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை தொடரும். தென்மேற்கு வங்கக் க‌டல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், அந்த கடற்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் பருவமழை படிப்படியாக தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் ரூ.36 கோடியில் காவலர் குடியிருப்புகள், தீயணைப்பு நிலைய கட்டிடங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
தமிழகத்தில் ரூ.36 கோடியில் காவலர் குடியிருப்புகள், மாவட்ட காவல் அலுவலகம், தீயணைப்பு நிலைய கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
2. தமிழகத்தில் 6 கோடி வாக்காளர்கள்: ஆண்களைவிட பெண்கள் 7 லட்சம் பேர் அதிகம்
தமிழகத்தில் 6 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களைவிட பெண்கள் 7 லட்சம் பேர் அதிகம் உள்ளனர்.
3. தமிழகத்தில் தமிழர்களுக்கே வேலை: சென்டிரல் ரெயில் நிலையத்தில் வடமாநிலத்தினரை தடுத்து நிறுத்தும் போராட்டம்
தமிழகத்தில் தமிழர்களுக்கே வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்டிரல் ரெயில் நிலையத்தில் வடமாநிலத்தினரை தடுத்து நிறுத்தும் போராட்டத்தை தமிழ்த்தேசிய பேரியக்கத்தினர் நடத்தினர்.
4. தமிழகத்தில் 10 நகரங்களில்: குடிநீர் வழங்கல், கழிவுநீர் மேலாண்மையை மேம்படுத்த ரூ.1,475 கோடி நிதியுதவி - ஆசிய வளர்ச்சி வங்கி தகவல்
தமிழகத்தின் 10 நகரங்களில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் மேலாண்மையை மேம்படுத்தும் திட்டத்துக்காக ரூ.1,474.75 கோடி கடனுக்கான ஒப்பந்தத்தில் ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளன.
5. தொடர் மழைக்கு 6 பேர் பலி: தமிழகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை - 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழைக்கு 6 பேர் பலியாகினர். கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.