ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவது பற்றி தேர்தல் ஆணையம் ரகசிய அறிக்கை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல்


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவது பற்றி தேர்தல் ஆணையம் ரகசிய அறிக்கை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல்
x
தினத்தந்தி 22 Oct 2019 11:15 PM GMT (Updated: 22 Oct 2019 9:39 PM GMT)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகாரை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவது குறித்து தேர்தல் ஆணையம் சென்னை ஐகோர்ட்டில் ரகசிய அறிக்கை தாக்கல் செய்தது.

சென்னை,

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. அப்போது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கியதாக அ.தி.மு.க. (அம்மா) அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ரூ.90 கோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல அமைச்சர்களிடம்
ப்படைத்ததற்கான ஆவணங்களை கைப்பற்றினர். இதையடுத்து இ
வழக்கு ரத்து

இதுதொடர்பாக டி.டி.வி. தினகரன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதன்படி அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அதில் யாருடைய பெயரையும் குறிப்பிடாததால் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வக்கீல் வைரக்கண்ணன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்குடன், ஆர்.கே.நகர் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் தொடர்ந்த வழக்கு ஆகியவற்றை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் விசாரித்து வருகின்றனர். கடந்த முறை இந்த வழக்கு விசாரணையின்போது பணப்பட்டுவாடா புகாரை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவது குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்குகள் நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல் நிரஞ்சன் ராஜகோபால், ஒரு ரகசிய அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த ரகசிய அறிக்கையை நீதிபதிகள் படித்து பார்த்தனர்.

அப்போது, தமிழக அரசு பிளடர் வி.ஜெயபிரகாஷ் நாராயணன், இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் ஆஜராக உள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story