மாநில செய்திகள்

சட்டவிரோதமாக பேனர் விவகாரம்! சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க பிரமாண பத்திரம் தாக்கல் + "||" + Illegal banner issue: AIADMK Brain Bond Filing at Madras Court

சட்டவிரோதமாக பேனர் விவகாரம்! சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க பிரமாண பத்திரம் தாக்கல்

சட்டவிரோதமாக பேனர் விவகாரம்! சென்னை ஐகோர்ட்டில்  அ.தி.மு.க பிரமாண பத்திரம் தாக்கல்
சட்டவிரோதமாக பேனர் வைக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அதிமுக தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

சட்டவிரோதமாக பேனர் வைத்தது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, சுபஸ்ரீ மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட கோரி சுபஸ்ரீ தந்தை ரவி தொடர்ந்த வழக்கு உள்ளிட்ட வழக்குகள் இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கின் விசாரணை அறிக்கை காவல் துறையினர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பள்ளிக்கரணையில் அனுமதியில்லாமல் பேனர் வைத்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சுபஸ்ரீ மரண வழக்கின் விசாரணை முடிவு தொடர்பாக இறுதி அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, கட்சி நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தி திமுக தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

தற்போது ஒருமாதம் கழித்து இன்று பேனர் வைக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாக அதிமுக தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சீன பிரதமரை வரவேற்று பேனர் வைக்க ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில்  வழக்கு தொடர்ந்த டிராபிக் ராமசாமிக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், பேனர் வைக்க அரசின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்று தான் உத்தரவு பிறப்பித்ததாகவும், பேனர் வைக்க அனுமதி அளித்ததாக செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், சுபஸ்ரீயின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு என தெரிவித்த நீதிபதிகள், விபத்து குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஏன் உத்தரவிட வேண்டும் என கேள்வி எழுப்பினர்.

மேலும், கூடுதல் இழப்பீடு தொடர்பாக மோட்டார் வாகன தீர்ப்பாயத்தை அணுகலாம் என அறிவுறுத்திய நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சசிகலா ரூ.168 கோடிக்கு பினாமி சொத்து வாங்கியது உண்மை தான் - ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்
சசிகலா ரூ.168 கோடிக்கு பினாமி சொத்து வாங்கியது உண்மை தான் என ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.
2. 8,888 பேருக்கான சீருடைப் பணியாளர்கள் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
8,888 பேருக்கான சீருடைப் பணியாளர்கள் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
3. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் - மத்திய அரசு
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என மத்திய அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்து உள்ளது.
4. பெரியார் குறித்த பேச்சு : ரஜினிக்கு எதிரான திராவிடர் விடுதலை கழக வழக்கு வாபஸ்
தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை பரப்பியதாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன.
5. புகாருக்கு முகாந்திரம் இருந்தால் மட்டுமே அமைச்சர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்படும்; ஐகோர்ட்டில் அரசு வக்கீல் வாதம்
அமைச்சர் உள்ளிட்டோருக்கு எதிரான விசாரணையில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால் மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்படும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை