6 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கிய பிரதமருக்கு நன்றி -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்


6 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கிய பிரதமருக்கு நன்றி -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
x
தினத்தந்தி 23 Oct 2019 2:52 PM GMT (Updated: 23 Oct 2019 2:52 PM GMT)

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்த மத்திய அரசுக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை,

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகத்தில்  புதிதாக  6 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6  மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரவை  ஒப்புதல் அளித்து உள்ளது. 

ஒவ்வொரு மருத்துவக்கல்லூரியும் ரூ.325 கோடியில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. மத்திய அரசு ரூ.195 கோடியும் தமிழக அரசு  ரூ.130 கோடியும் வழங்குகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார் மேலும் பிரதமர் மோடி,மற்றும் மத்திய மந்திரி ஹர்ஷ்வர்தனுக்கு நன்றி தெரிவித்தும் கடிதம் எழுதியுள்ளார்.

Next Story