நாங்குநேரியில் அதிமுக வெற்றி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு


நாங்குநேரியில் அதிமுக வெற்றி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x
தினத்தந்தி 24 Oct 2019 10:36 AM GMT (Updated: 2019-10-24T16:06:12+05:30)

நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 32,312 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

நாங்குநேரி, 

நாங்குநேரி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் நாங்குநேரி தொகுதிக்கு கடந்த 21-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜ்நாராயணன் உள்பட 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  இதில் மொத்தம் 66.35 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் முதல் சுற்றில் இருந்தே அதிமுக வேட்பாளர் முன்னிலை பெறத் தொடங்கினார். வாக்கு எண்ணிக்கை முடிவில், அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 94,484 வாக்குகளும், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரூபி மனோகரன் 62,172 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம்,  சுமார் 32,312 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றி பெற்றார்.

Next Story