மாநில செய்திகள்

விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் அமோக வெற்றி முழுவிவரம் + "||" + Muthamizelchelvan Admk candidate victory Full details

விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் அமோக வெற்றி முழுவிவரம்

விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் அமோக வெற்றி முழுவிவரம்
விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் அமோக வெற்றி பெற்றார். வேட்பாளர்கள் ஓட்டு முழு விவரம் வெளியாகி உள்ளது.
சென்னை

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் ஆகியோர் முன்னிலையில் இருந்தனர். 

நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன்,  விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்தி ஆகியோர் பின்தங்கினர். காலையில் வாக்கு வித்தியாசம் 2 ஆயிரம் வாக்குகள் என்ற நிலையில் இருந்தது. அதன்பின்னர் அதிமுகவின் வாக்குகள் மேலும் அதிகரித்தது.

ஒரு கட்டத்தில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள் 113745, திமுக வேட்பாளர் 68828 என்ற நிலையில் இருந்தார். வாக்கு வித்தியாசம் 44 917 ஆகும்.

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம்  அறிவித்து உள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் பெற்றார்.

எண்வேட்பாளர்கள்கட்சிமின்னணு வாக்குதபால் ஓட்டுமொத்தம்சதவீதம்
1புகழேந்திதிமுக68828146884236.48
2முத்தமிழ் செல்வன்அ.தி.மு.க1137452111376660.29
3கந்தசாமிநாம் தமிழர்2918329211.55
4கவுதமன்சுயேட்சை32803280.17
5சதீஷ் எஸ்சுயேட்சை590590.03
6சதீஷ் ஆர்சுயேட்சை551560.03
7சுபாகர்சுயேட்சை12401240.07
8செந்தில்குமார்சுயேட்சை610610.03
9தங்கராசுசுயேட்சை640640.03
10தாமோதரன்சுயேட்சை540540.03
11முருகன்சுயேட்சை890890.05
12ரவிக்குமார்சுயேட்சை76807680.41
13நோட்டா 1560015600.83
 மொத்தம் 18865339188692100%


தொடர்புடைய செய்திகள்

1. மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
2. மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
3. மாநிலங்களவை தேர்தல் ; 12-13 இடங்கள் கிடைக்கும் என பாஜக எதிர்பார்ப்பு
மாநிலங்களவையில் காலியாகவுள்ள 55 இடங்களுக்கு வரும் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
4. ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர் செல்வம் மரியாதை
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.