மாநில செய்திகள்

கிருஷ்ணகிரியில் கலவரத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் 30 பேர் கைது + "||" + Vijay Fans arrested in krishnagiri

கிருஷ்ணகிரியில் கலவரத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் 30 பேர் கைது

கிருஷ்ணகிரியில் கலவரத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் 30 பேர் கைது
கிருஷ்ணகிரியில் கலவரத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி,

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ படம் தீபாவளியையொட்டி இன்று ரிலீசானது. நேற்று மாலை முதலே பிகில் படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் குவிந்தனர். அவர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.

கள்ளக்குறிச்சி பகுதியிலும் 3 தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டுள்ளது. ஆனால் இன்று காலை சிறப்பு காட்சிகள் நடத்தப்படவில்லை. எனவே விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். சிறப்பு காட்சிகள் நடத்தக்கோரி போராட்டம் செய்தனர்.

அப்போது தியேட்டர் முன்பு கோ‌ஷமிட்டு ரகளை செய்தனர். ரவுண்டானாவில் உள்ள போலீசாரின் தடுப்புகளையும் சிசிடிவி கேமிராக்களையும் உடைத்தனர். கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். 

விஜய் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அங்கு கூடிநின்ற விஜய் ரசிகர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதனால் அந்த பகுதியில் பதட்டமான நிலை உருவானது.  இந்த நிலையில், ரகளையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் ஓ.டி.டி.யில் வெளியாகுமா? - டைரக்டர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்
விஜய்யின் மாஸ்டர் படம் ஓ.டி.டி.யில் வெளியாகுமா என்று டைரக்டர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
2. விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம்
விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
3. விஜய்யை எம்.ஜி.ஆராக சித்தரித்த போஸ்டர் :"எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது" - அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து
எம்.ஜி.ஆர் போல் சித்தரிப்பதன் மூலம் எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.
4. விஜய்யின் மாஸ்டர் ஓ.டி.டி.யில் வெளியாகுமா?
விஜய்யின் மாஸ்டர் படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட படக்குழுவினருடன் பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன.
5. தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனா குறைய அரசு நடவடிக்கை; முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனா குறைய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.