முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி அதிமுக எம்.எல்.ஏ.க்கள்


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி அதிமுக எம்.எல்.ஏ.க்கள்
x
தினத்தந்தி 25 Oct 2019 9:30 AM GMT (Updated: 2019-10-25T15:00:26+05:30)

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர்கள் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சேலம்,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன், 33 ஆயிரத்து 445 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமியை நாராயணன் எம்.எல்.ஏ. சந்தித்து வாழ்த்து பெற்றார். 

முதலமைச்சரை சந்தித்தப்பின் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.  நாராயணன் கூறும் போது, இடைத்தேர்தலில் வெற்றியடைய வைத்த வாக்காளர்களுக்கு நன்றி என கூறினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களிடம் கொண்டுசேர்த்ததாலேயே இந்த வெற்றி கிடைத்ததாகக் கூறினார்.

இதேபோல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44 ஆயிரத்து 924 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முதலமைச்சர் இல்லத்துக்கு வந்த முத்தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Next Story