குழந்தையை மீட்கும் பணி மிகவும் சவாலாக உள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்

குழந்தையை மீட்கும் பணி மிகவும் சவாலாக உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
திருச்சி,
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ, கலாமேரி தம்பதியின் மகன் சுர்ஜித் வில்சன் (வயது 2). வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தது. பெற்றோரின் சொந்த இடத்தில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணறு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்ட நிலையில், மழைப்பொழிவால் தற்போது மீண்டும் பள்ளம் ஏற்பட்டிருப்பதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை உயிருடன் மீட்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் மருத்துவ குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தந்தி டிவி-க்கு அளித்த பேட்டியில்,
குழந்தையை மீட்கும் பணி மிகவும் சவாலாக உள்ளது. குழந்தையின் தலைமேல் மண் சரிந்துள்ளதால் ஆக்சிஜன் செலுத்துவதில் சிரமமாக உள்ளது.
தற்போது 5-வது குழு, குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. 70 அடிக்கு கீழே சென்றுள்ளதால், குழந்தையின் அழுகை சத்தத்தை கேட்க முடியவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story