மாநில செய்திகள்

குழந்தை சுர்ஜித்தை மீட்க புது முயற்சி; பக்கவாட்டில் ஆழ்துளைக் கிணறு தோண்ட முடிவு + "||" + 2-Year-Old Trapped In Tamil Nadu Borewell For 22 Hours, NDRF Joins Rescue

குழந்தை சுர்ஜித்தை மீட்க புது முயற்சி; பக்கவாட்டில் ஆழ்துளைக் கிணறு தோண்ட முடிவு

குழந்தை சுர்ஜித்தை  மீட்க புது முயற்சி; பக்கவாட்டில் ஆழ்துளைக் கிணறு தோண்ட முடிவு
ஆழ்துளை கிணற்றில் 70 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தை சுர்ஜித் 85 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
திருச்சி, 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது. பின்னர் 70 அடி ஆழத்துக்கு சென்றது.

குழந்தை  ஆழ்துளை கிணற்றில் சிக்கி 24 மணி நேரம் கடந்துவிட்ட நிலையில் தற்போது 85 அடி ஆழத்திற்கு குழந்தை சென்றுவிட்டது.  குழந்தையை மீட்க மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது

ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டி குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 85 அடிக்கு குழி தோண்டி, பக்கவாட்டில் சென்று குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. என்எல்சி, ஒஎன்ஜிசி, தனியார் அமைப்புகள் இணைந்து போர்வெல் அமைக்கும் கருவி மூலம் குழித்தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒன்றரை மணிநேரத்தில் இதைச் செய்து முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ரேசன் கடைகளில் பருத்தி துணியாலான இலவச முக கவசங்கள் வழங்கும் திட்டம் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ரேசன் கடைகளில் இலவச முக கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
2. தமிழகத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் 1384 பேர் கொரோனாவால் பாதிப்பு
தமிழகத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் மேலும் புதிதாக ஆயிரத்து 384 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
3. கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில், முதற்கட்ட ஆராய்ச்சி வெற்றி - டாக்டர் சுதா சேஷய்யன்
கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில், முதற்கட்ட ஆராய்ச்சி வெற்றி பெற்றுள்ளதாக டாக்டர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.
4. ஊரடங்கு நீட்டிப்பு: ரேசன்கார்டுதாரர்களுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு
ஊரடங்கு நீட்டிப்பால் ரேசன்கார்டுதாரர்களுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார்.
5. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் 2500; இனி தான் வேகம் எடுக்கும்!! எச்சரிக்கை தேவை!!!
இந்தியாவில், கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இனிதான் நாடு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது மற்ற நாடுகள்.