குழந்தையை மீட்கும் திட்டம் எக்காரணம் கொண்டும் கைவிடப்படாது: வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்


குழந்தையை மீட்கும் திட்டம் எக்காரணம் கொண்டும் கைவிடப்படாது: வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 28 Oct 2019 6:05 AM GMT (Updated: 28 Oct 2019 6:05 AM GMT)

குழந்தையை மீட்கும் திட்டம் எக்காரணம் கொண்டும் கைவிடப்படாது என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.

சென்னை,

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி 64 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது. நடுக்காட்டுப்பட்டியில் மீட்பு பணி நடைபெறும் இடத்தில் லேசான மழை பெய்து வருகிறது. 

 மழையில் நனைந்து கொண்டே வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

துளையிடும் பணி திருப்தி தரும் வகையில் இல்லை, பாறை நிறைந்த பகுதி என்பதால் சவாலாக உள்ளது. குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். தவறுதலான நம்பிக்கையை ஊட்டக்கூடாது என கவனத்தில் இருக்கிறோம் 

குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும். கீழே கரிசல் மண் தென்பட வாய்ப்பு என கூறுகிறார்கள். பள்ளம் தோண்டும் பணி தொடரும். 40 அடிவரை தோண்டப்பட்ட நிலையில் பள்ளம் தோண்டும் பணி 98 அடிவரை நடைபெறும்.

பலூன் டெக்னாலஜி முறையை பயன்படுத்த முடியாது. கடினமான பாறைகள் இருக்கும் பகுதி என்பதால் மீட்பு பணி சவாலாக உள்ளது.

பள்ளம் தோண்டி முடிக்க இன்னும் 12 மணி நேரமாகும். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை இன்னும் 88 அடியிலேயே உள்ளது. குழந்தை தொடர்ந்து கேமிராமூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.தொழில்முறையில் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை தான் செய்து வருகிறோம் 

தவறுதலான நம்பிக்கையை ஊட்டக்கூடாது என கவனத்தில் இருக்கிறோம்.  குழந்தையை மீட்கும் திட்டம் எக்காரணம் கொண்டும் பாதிலேயே கைவிடப்படாது. எந்தவிதத்திலும் முயற்சி கைவிடப்படாது, தொடர்ந்து மீட்பு பணி நடைபெறும் என கூறினார்.

Next Story