குறைகளை பற்றி பேசாமல் நம்மால் என்ன உதவ முடியும் என்பதை பற்றி பேசுவதுதான் சரியாக இருக்கும்- பொன். ராதாகிருஷ்ணன்


குறைகளை பற்றி பேசாமல் நம்மால் என்ன உதவ முடியும் என்பதை பற்றி பேசுவதுதான் சரியாக இருக்கும்- பொன். ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 28 Oct 2019 12:10 PM GMT (Updated: 2019-10-28T17:40:26+05:30)

குறைகளை பற்றி பேசாமல் நம்மால் என்ன உதவ முடியும் என்பதை பற்றி பேசுவதுதான் சரியாக இருக்கும் என பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னை,

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி 71 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது. பள்ளம் தோண்டும் ரிக் இயந்திரத்தில் மீண்டும் கோளாறு ஏற்பட்டதால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

மீட்பு பணிகள் நடைபெற்று வரும் இடத்திற்கு பொன்.ராதாகிருஷ்ணன் வருகை தந்தார். அங்கு மீட்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;-

அனைத்து ஊழியர்களும் தனது வீட்டு துயரத்தைபோல் எண்ணி பணியாற்றி வருகின்றனர். நல்ல முறையில் குழந்தை சுஜித் மீட்கப்படுவான் என்ற நம்பிக்கை உள்ளது. 

குறைகளை பற்றி பேசாமல் நம்மால் என்ன உதவ முடியும் என்பதை பற்றி பேசுவதுதான் சரியாக இருக்கும். எந்தவித பேதமுமின்றி அனைவரின் உணர்வும் குழந்தையின் மீது குவிந்துள்ளது.  இந்த விவகாரத்தில் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது என கூறினார்.

Next Story