குழந்தை சுஜித் மீட்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கினேன்- எடப்பாடி பழனிசாமி


குழந்தை சுஜித் மீட்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கினேன்- எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 28 Oct 2019 12:34 PM GMT (Updated: 28 Oct 2019 12:34 PM GMT)

குழந்தை சுஜித் மீட்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கினேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

சென்னை, 

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி 72 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது.பள்ளம் தோண்டும் ரிக் இயந்திரத்தில் மீண்டும் கோளாறு ஏற்பட்டதால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

குழந்தை சுஜித்தை மீட்கும் பணி நடைபெற்று வரும் நடுக்காட்டுப்பட்டியில் மழை பெய்து வருகிறது. 

நடுக்காட்டுப்பட்டியில் குழந்தை சுஜித்தின் பெற்றோரை சந்தித்து வைகோ ஆறுதல் கூறினார்.

2 வயது குழந்தையை மீட்கும் பணி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில் கூறி இருப்பதாவது:-

குழந்தை சுஜித் மீட்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கினேன். தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினருடன் 3 அமைச்சர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

என்.எல்.சி.- ஓ.என்.ஜி.சி மற்றும் எல்.அண்ட்.டி, என்.ஐ.டி. நிபுணர்கள் நடுக்காட்டுப்பட்டியில் முகாமிட்டு உள்ளனர். அதிநவீன துளையிடும் எந்திரங்கள் மூலம் மீட்புப் பணி தொடர்கிறது. தேவை ஏற்படும்போது மேலும் உதவிகள் செய்யப்படும் என கூறி உள்ளார். 

Next Story