மாநில செய்திகள்

ஒவ்வொரு முறையும் யாராவது உயிர் இழந்தால்தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா? சென்னை ஐகோர்ட்டு சரமாரி கேள்வி + "||" + That's every time someone dies Will you enforce the law? The Madras high court Question

ஒவ்வொரு முறையும் யாராவது உயிர் இழந்தால்தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா? சென்னை ஐகோர்ட்டு சரமாரி கேள்வி

ஒவ்வொரு முறையும் யாராவது உயிர் இழந்தால்தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா? சென்னை ஐகோர்ட்டு சரமாரி கேள்வி
ஒவ்வொரு முறையும் யாராவது உயிர் இழந்தால்தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா? என்று சென்னை ஐகோர்ட்டு சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் அப்துல்கலாம் உதவியாளர் பொன்ராஜ் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழும்போது அவர்களை காப்பாற்ற 6 விதமான தொழில்நுட்பங்கள் இந்தியாவில் உள்ளன.

இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அடுத்த சில மணி நேரத்திலேயே உயிருடன் குழந்தையை மீட்டுவிடலாம். ஆனால் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டி சம்பவத்தில் இந்த தொழில் நுட்பத்தில் ஒன்றை கூட பயன்படுத்தவில்லை.

காலதாமதம் ஏற்பட்டதால் ஒரு சிறுவனின் உயிர் பறிபோய் விட்டது. கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு 2010-ம் ஆண்டே பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவின்படி ஆழ்துளை கிணறுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை தமிழக அரசு 2015-ம் ஆண்டு கொண்டு வந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும், தமிழக அரசின் சட்டத்தையும் அரசு அதிகாரிகள் முழுமையாக அமல்படுத்தவில்லை.

எனவே, இது சம்பந்தமாக தகுந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும். கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு தொட்டியாக பயன்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன், ஷேசாய் ஆகியோர் அவசர வழக்காக இன்று காலை விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர்.

அப்போது தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள்  சரமாரியாக கேள்வி எழுப்பினர். 

ஒவ்வொரு முறையும் யாராவது உயிர் இழந்தால்தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா? 

ஆழ்துளை கிணறு அமைக்க வழங்கப்பட்ட அனுமதிகள்  குறித்த ஆவணங்கள் பராமரிக்கப்படுகிறதா?

இதுவரை எத்தனை ஆழ்துளை கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது..?

பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் எத்தனை?

விதிமுறைகளை  மீறியவர்கள் எத்தனைபேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது?

சுபஸ்ரீ மரணம் அடைந்ததும் பேனர் சட்டத்தையும், சுஜித் மரணம் அடைந்ததும் ஆழ்துளை கிணறு சட்டத்தையும் சிறிது காலம் அமல்படுத்திவிட்டு அதன்பின்பு கைவிட்டு விடுகின்றனர்.

ஒவ்வொரு தனிமனிதனும் சமூக பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும்.

அரசு கொண்டு வந்த விதிகள் பின்பற்றப்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு செய்வது இல்லை.

மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சட்டத்தை முறைப்படி அமல்படுத்தினால் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடைபெறாது. இவ்வாறு நீதிபதிகள் அரசு தரப்பு வக்கீலிடம் தெரிவித்தனர். நவம்பர் 21 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. புகாருக்கு முகாந்திரம் இருந்தால் மட்டுமே அமைச்சர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்படும்; ஐகோர்ட்டில் அரசு வக்கீல் வாதம்
அமைச்சர் உள்ளிட்டோருக்கு எதிரான விசாரணையில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால் மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்படும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்
ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட தலைவி படத்துக்கும், குயின் இணையதள தொடருக்கும் தடை இல்லை என தீபா தாக்கல் செய்த வழக்கை சென்னை ஐகோர்ட் முடித்து வைத்தது.
3. டெல்லியாக மாற சென்னை விரும்பவில்லை! பசுமையான காடுகளை காக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள்
கான்கிரீட் காடுகளாக மாறிவரும் சென்னையில் பசுமையான காடுகளை காக்க வேண்டும். டெல்லியாக மாற சென்னை விரும்பவில்லை என சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.
4. குழந்தை சுஜித் விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் மு.க.ஸ்டாலின் பேசுவது வருத்தமளிக்கிறது!-முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
குழந்தை சுஜித் விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் மு.க.ஸ்டாலின் பேசுவது வருத்தமளிக்கிறது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
5. சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக ஏபி சஹியை நியமித்து ஜனாதிபதி உத்தரவு
சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக ஏபி சஹியை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை