மாநில செய்திகள்

சுஜித் எப்போது இறந்திருப்பார் என்ற கேள்விக்கு மருத்துவ ஆய்வின் மூலமே சொல்ல முடியும் - வருவாய் நிர்வாக ஆணையர் + "||" + The question of when Sujith dead can be said only through medical examination - Revenue Administration Commissioner

சுஜித் எப்போது இறந்திருப்பார் என்ற கேள்விக்கு மருத்துவ ஆய்வின் மூலமே சொல்ல முடியும் - வருவாய் நிர்வாக ஆணையர்

சுஜித் எப்போது இறந்திருப்பார் என்ற கேள்விக்கு மருத்துவ ஆய்வின்  மூலமே சொல்ல முடியும் -  வருவாய் நிர்வாக  ஆணையர்
சுஜித் எப்போது இறந்திருப்பார் என்ற கேள்விக்கு மருத்துவ ஆராய்ச்சியின் மூலமே சொல்ல முடியும் என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை

வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று சென்னை, எழிலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

சுஜித் எப்போது இறந்திருப்பார் என்ற கேள்விக்கு மருத்துவ ஆராய்ச்சியின் மூலமே சொல்ல முடியும் எனவும், அதுகுறித்த சோதனை நடைபெற்று வருவதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சுஜித் உடல் மீட்புக்கு ரூ.11 கோடி செலவிடப்பட்டதாக வரும் செய்திகள் குறித்துப் பதிலளித்த ராதாகிருஷ்ணன், "வதந்திகளை நம்ப வேண்டாம், பேரிடர் மீட்பில் பணம் பொருட்டல்ல. யாரும் பணம் கேட்கவில்லை. இது வாட்ஸ் அப்பில் வரக்கூடிய வதந்திகள். நான் இதுகுறித்து பேட்டியே கொடுக்கவில்லை," எனக் கூறினார்.