உள்ளாட்சி தேர்தல் முன் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை ‘காணொலி’ காட்சி மூலம் நடந்தது


உள்ளாட்சி தேர்தல் முன் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை ‘காணொலி’ காட்சி மூலம் நடந்தது
x
தினத்தந்தி 30 Oct 2019 11:25 PM GMT (Updated: 30 Oct 2019 11:25 PM GMT)

உள்ளாட்சி தேர்தல் முன் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ரா.பழனிசாமி நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்பட உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (டிசம்பர்) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, உள்ளாட்சி தேர்தல் முன் ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் ரா.பழனிசாமி தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி சென்னை பெசன்ட்நகர் ராஜாஜிபவனில் உள்ள தேசிய தகவல் மைய அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி (வீடியோ கான்பரன்சிங்) மூலம் மாவட்ட தேர்தல் அதிகாரிகளான கலெக்டர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

முக்கிய அம்சங்கள்

இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் நியமிப்பது, வாக்குச்சாவடிகள் பிரிப்பது, வாக்காளர் பட்டியல் உள்பட அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான மின்னணு எந்திரங்கள் குறித்த விவரங்கள், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை கையாள்வது குறித்த பயிற்சி அளிப்பது குறித்தும் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story