மாநில செய்திகள்

கோவை-நாகூரில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை + "||" + National Intelligence Bureau Testing in Coimbatore-Nagaur

கோவை-நாகூரில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை

கோவை-நாகூரில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை
கோவை-நாகூரில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை

கோவையில் 2 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

உக்கடம் ஜி.எம் நகரில் நிசார் என்பவரது வீட்டிலும், லாரிபேட்டையில் சவுருதீன் என்பவரது வீட்டிலும், 5 பேர் கொண்ட அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். என்.ஐ.ஏ அதிகாரிகளின் இந்த திடீர் சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. 

தொடர்ந்து அங்கு, மாநகர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே நாகூரிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

நாகூர் அருகே மியான்தெருவில் முகமது அஜ்மல் என்பவரது வீட்டில் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்தனர். அஜ்மலை கைது செய்து விசாரணைக்காக என்.ஐ.ஏ அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கிராமத்திலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கிராமத்தில் அப்துல்லா என்பவரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.