குழந்தை சுஜித் விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் மு.க.ஸ்டாலின் பேசுவது வருத்தமளிக்கிறது!-முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி


குழந்தை சுஜித் விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் மு.க.ஸ்டாலின் பேசுவது வருத்தமளிக்கிறது!-முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 31 Oct 2019 5:58 AM GMT (Updated: 31 Oct 2019 5:58 AM GMT)

குழந்தை சுஜித் விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் மு.க.ஸ்டாலின் பேசுவது வருத்தமளிக்கிறது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம்

சேலத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்க முடிந்தவரை அரசு போராடியது; மணப்பாறையில் அமைச்சர்கள் 4 நாட்கள் தங்கி பணியாற்றினர். தீபாவளி மழையை பொருட்படுத்தாமல் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

குழந்தை சுஜித் விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் மு.க.ஸ்டாலின் பேசுவது வருத்தமளிக்கிறது! அரசை குறை சொல்ல வேண்டுமென்ற நோக்கத்தில் ஸ்டாலின் பேசி வருகிறார். குழந்தை சுஜித்தை உயிரோடு மீட்க வேண்டும் என  முடிந்தளவு முயற்சிகள் செய்தோம். சுஜித்தை உயிரோடு மீட்காதது வேதனை அளிக்கிறது. காழ்ப்புணர்ச்சியில் ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். 

இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது. ஆழ்துளை கிணறுகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.   தேசிய பேரிடர் மீட்புப் படையினரே துணை ராணுவப்படைதான் என கூறினார்.

Next Story