மாநில செய்திகள்

அரபிக் கடலில் கியார், மஹா என்ற இரு புயல்கள் உருவாகி இருப்பதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு + "||" + Because two storms are brewing in the Arabian Sea Heavy rainfall in Tamil Nadu

அரபிக் கடலில் கியார், மஹா என்ற இரு புயல்கள் உருவாகி இருப்பதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

அரபிக் கடலில் கியார், மஹா என்ற இரு புயல்கள் உருவாகி இருப்பதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
அரபிக் கடலில் கியார், மஹா என்ற இரு புயல்கள் உருவாகி இருப்பதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை

சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

வங்கக்கடலில் நவம்பர் 4ஆம் தேதி அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அரபிக் கடலில் கியார், மஹா என்ற இரு புயல்கள் உருவாகி இருப்பதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது லேசான மழை பெய்யும்.

குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை,ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில்  பல்வேறு இடங்களில் மிதமான  மழை பெய்யும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவை புரட்டி போட்ட புயல்: 8 பேர் பலி
அமெரிக்காவை தாக்கிய புயல் காரணமாக 8 பேர் பலியாகினர்.
2. கஜா புயல் நிவாரணத்துக்கு வந்த 23 அரிசி பைகள்-தார்ப்பாய்கள் குழி தோண்டி புதைப்பு
அறந்தாங்கி அருகே கஜா புயல் நிவாரணத்துக்கு வந்த 23 அரிசி பைகள்-தார்ப்பாய்கள் குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
3. அரபிக்கடலில் ஒரே சமயத்தில் 2 புயல்கள்
அரபிக்கடலில் ஒரே சமயத்தில் 2 புயல்கள் உருவாகி உள்ளன.
4. வலுவடைந்து வரும் ‘கியார்’ புயல்- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள ‘கியார்’ புயல், மேலும் வலுவடைந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. ஜப்பானில் புயல் காரணமாக 200 விமானங்கள் ரத்து
ஜப்பானில் புயல் காரணமாக 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.