மருத்துவர்கள் பணிக்கு செல்லாவிடில் காலியிடங்களாக அறிவிக்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி


மருத்துவர்கள் பணிக்கு செல்லாவிடில் காலியிடங்களாக அறிவிக்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 31 Oct 2019 7:56 AM GMT (Updated: 31 Oct 2019 7:56 AM GMT)

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்கள் பணிக்கு செல்லாவிடில் காலியிடங்களாக அறிவிக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

நோயாளிகளின் நலன் கருதி, பணிக்கு திரும்புமாறு அழைப்பு விடுத்தோம். தண்டிப்பது அரசின் நோக்கம் அல்ல. அரசு மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறது.  மருத்துவர்கள் போராடுவதற்கு அரசு மருத்துவமனை போராட்ட களம் அல்ல. 

நேற்று மட்டும் 4,683 மருத்துவர்கள் பணிக்கு வரவில்லை. அதிலிருந்து இன்று 1,550 பேர் பணிக்கு திரும்பி உள்ளனர். இன்று அதில் 1,550 பேர் பணிக்கு திரும்பி உள்ளனர். தற்போது வரை 3127 மருத்துவர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். 

அரசின் வேண்டுகோளை ஏற்று பணிக்கு திரும்பிய அரசு மருத்துவர்களுக்கு நன்றி. வேலை நிறுத்தத்தை கைவிட்டு அரசு மருத்துவர்கள் பணிக்கு செல்லாவிடில் காலியிடங்களாக அறிவிக்கப்படும். இன்று மாலைக்குள் புதிய அரசு மருத்துவர்களை நியமிக்கும் பணி தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story