காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயர் குற்றவாளி -கோவை நீதிமன்றம்


காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயர் குற்றவாளி  -கோவை நீதிமன்றம்
x
தினத்தந்தி 31 Oct 2019 8:38 AM GMT (Updated: 31 Oct 2019 8:38 AM GMT)

காற்றாலை மோசடி வழக்கில் சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் குற்றவாளி என கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

கோவை,

கேரளாவில் சோலார் பேனல் மோசடி புகாரில் சிக்கியவர் சரிதாநாயர். இவர் கோவை வடவள்ளியில் நிறுவனம் நடத்தி, காற்றாலை அமைத்துக் கொடுப்பதாக அறிவித்தார். இதையடுத்து வடவள்ளியை சேர்ந்த தியாகராஜன் ரூ.28 லட்சமும், ஊட்டியை சேர்ந்த வெங்கட்ரமணன், ஜோயோ ஆகியோர் ரூ.5½ லட்சமும் கொடுத்தனர். ஆனால் சரிதா நாயர் குறிப்பிட்டபடி காற்றாலை அமைத்து கொடுக்கவில்லை.

இதுகுறித்த புகாரின்பேரில் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சரிதாநாயர், அவருடைய முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் சரிதா நாயர் பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் குற்றவாளி என கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

Next Story