மாநில செய்திகள்

திருச்சியில் 19-வது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் 4 மாநில அதிகாரிகள் பங்கேற்பு + "||" + 4 State officials participating in 19th Cauvery Disciplinary Committee meeting in Trichy

திருச்சியில் 19-வது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் 4 மாநில அதிகாரிகள் பங்கேற்பு

திருச்சியில் 19-வது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் 4 மாநில அதிகாரிகள் பங்கேற்பு
திருச்சியில் நடைபெற்ற 19-வது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் 4 மாநில அதிகாரிகள் பங்கேற்றனர்.
திருச்சி

காவிரி ஒழுங்காற்று குழுவின் 19-வது கூட்டம் திருச்சியில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் தலைமை பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

ஒழுங்காற்று குழுவின் செயலாளர் குமார், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உதவி இயக்குனர் ராம் பக்சிங், தமிழ்நாடு உட்பட 4 மாநில நீர்வள ஆதார அமைப்பின் தலைமை அதிகாரிகள் உட்பட 16 பேர் கலந்து கொண்டனர்.தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீர், மழைப்பொழிவு, அணைகளில் நீர் இருப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற்றது.

அப்போது, மழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை கருத்தில் கொள்ளக் கூடாது என்றும், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதிக்கக் கூடாது 

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி மாதந்தோறும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகத்திடம் இருந்து பெற்றுத்தர வேண்டுமென விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை