ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், மரியாதை
மெரினா கடற்கரயில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினர்.
சென்னை,
தமிழக சட்டசபையில் காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளுக்கும் கடந்த 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் நாங்குநேரி, தொகுதியில் ரெட்டியார்பட்டி நாராயணனும் , விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ்ச்செல்வனும் அ.தி.மு.க சார்பில் போட்டியிடு வெற்றி பெற்றனர்.அவர்கள் இருவரும் இன்று எம்.எல்.ஏ.வாக பதவியேற்கவுள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில், முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவர்களுடன் இன்று எம்.எல்.ஏவாக பதவியேற்க உள்ள ரெட்டியார்பட்டி நாராயணன் , முத்தமிழ்ச்செல்வன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகளை முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story