மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்கள் மழை நீடிக்கும்- சென்னை வானிலை ஆய்வு மையம் + "||" + Rain will last for 4 days in Tamil Nadu- Chennai Meteorological Department

தமிழகத்தில் 4 நாட்கள் மழை நீடிக்கும்- சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 4 நாட்கள் மழை நீடிக்கும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு பருவக்காற்று சாதகமாக வீசுவதால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை,

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் உருவான மஹா புயல் காரணமாக தமிழகத்தில் 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களிடம் பேசிய போது, “தமிழகத்தில் வடகிழக்கு பருவக்காற்று சாதகமாக வீசி வருவதால் அடுத்த 3, 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

மஹா புயல் கோவாவிற்கு தென்மேற்கே 310 கிலோ மீட்டர் தொலைவிலும், மங்களூரில் இருந்து வடமேற்கே 460 கிலோமீட்டர் தொலைவிலும், லட்சத்தீவுகளுக்கு உட்பட்ட அமிந்தி தீவில் இருந்து வடமேற்கே 450 கிலோ மீட்டர் தொலைவிலும் தற்போது மையம் கொண்டுள்ளது. 

அடுத்த 12 மணி நேரத்தில் இந்த புயல் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறும். வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வரும் இந்த புயல் வரும் 6 ஆம் தேதி குஜராத்தை அடையும். எனவே மஹா புயலால் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை. 

மேலும் அந்தமான் கடற்பகுதியில் வரும் 3 ஆம் தேதி புதிய மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகிறது. இது அதற்கடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற வாய்ப்புள்ளது. இதுவும் மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்வதால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை.
 
அந்தமான் கடற்பகுதியில் ஏற்படும் புதிய மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 4, 5 ஆம் தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் வைகை அணை நீர்மட்டம் 59 அடியாக குறைந்தது
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் வைகை அணை நீர்மட்டம் 59 அடியாக குறைந்தது.
2. மலையோர பகுதியில் கன மழை திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு; 3–வது நாளாக குளிக்க தடை
குமரி மாவட்டத்தில் மலையோர பகுதியில் பெய்த கன மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், 3–வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
3. அந்தமான் அருகே தீவிர புயலாக வலுப்பெற்ற புல்புல்; மீனவர்களுக்கு எச்சரிக்கை
அந்தமான் அருகே புல்புல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
4. புல் புல் புயலால் தமிழகத்துக்கு எந்த விதமான மழையும் இருக்காது - சென்னை வானிலை ஆய்வு மையம்
புல் புல் புயலால் தமிழகத்துக்கு எந்த விதமான மழையும் இருக்காது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. மத்திய வங்கக்கடலில் புயல் உருவாகிறது : மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.