சென்னையில் லாரி மீது அரசுப்பேருந்து மோதி விபத்து- நடத்துனர் பலி


சென்னையில் லாரி மீது அரசுப்பேருந்து மோதி விபத்து- நடத்துனர் பலி
x
தினத்தந்தி 2 Nov 2019 8:42 AM IST (Updated: 2 Nov 2019 8:42 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் அரசு பஸ் மற்றும் லாரி மோதிய விபத்தில் அரசு பஸ் நடத்துனர் பரிதாபாக உயிரிழந்தார்.

சென்னை,

சென்னை பாடி மேம்பாலம் அருகே கன்டெய்னர் லாரி மீது ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றி வந்த அரசு பஸ் மோதியதில், அரசு பஸ் நடத்துனர் சம்பவ இடத்திலேயே பரிதாபாக உயிரிழந்தார். 

மேலும் இந்த விபத்தில் 13-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story