மாநில செய்திகள்

“படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா” ரஜினிகாந்திற்கு தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து + "||" + To Rajinikanth, Tamilisai Soundararajn Greeting

“படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா” ரஜினிகாந்திற்கு தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து

“படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா”  ரஜினிகாந்திற்கு தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து
படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா என்று நடிகர் ரஜினிகாந்திற்கு, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

வரும் நவம்பர் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி கோவாவில் 50-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. இந்த திரைப்பட விழாவில்,  நடிகர் ரஜினிகாந்திற்கு சிறப்பு நட்சத்திர விருது ( Icon of Golden Jubilee) வழங்கப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார். விருது  வழங்குவதாக அறிவித்துள்ள மத்திய அரசுக்கு, நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து நடிகர் ரஜினிகாந்திற்கு  பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், படையப்பா இன்னும்  பல சாதனைகளை படையப்பா என்று தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், அபூர்வ ராகங்கள் தொடங்கி பேட்ட வரை சாதித்ததை வாழ்த்தி வாழ்நாள் சாதனையாளர் விருது. படையப்பா இன்னும்  பல சாதனைகளை படையப்பா  என வாழ்த்துகிறேன். என பதிவிட்டுள்ளார்.