மாநில செய்திகள்

சென்னையில் வெங்காயம் விலை 3 மடங்காக உயர்வு + "||" + Onion prices more than tripled in Chennai

சென்னையில் வெங்காயம் விலை 3 மடங்காக உயர்வு

சென்னையில் வெங்காயம் விலை 3 மடங்காக உயர்வு
சென்னையில் தொடர் மழையால் வெங்காயம் விலை கடந்த ஒரு வாரத்தில் 3 மடங்காக உயர்ந்துள்ளது.
சென்னை,

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் காய்கறி இறக்குமதி செய்யப்படுகிறது.  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது.  இதனால் காய்கறி சந்தையில் அவற்றின் வரத்து குறைந்து உள்ளது.  இதன் தொடர்ச்சியாக காய்கறிகளின் விலை அதிகரித்து உள்ளது.

தொடர்மழை, விளைச்சல் மற்றும் வரத்து குறைவு, ஆகியவற்றால் கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.

இதனால், கடந்த வாரம் ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் தற்போது ரூ.80க்கு விற்கப்பட்டு வருகிறது.  இது பொதுமக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. எகிப்து நாட்டில் இருந்து திருச்சிக்கு 30 டன் வெங்காயம் வந்தது
எகிப்து நாட்டில் இருந்து திருச்சிக்கு 30 டன் வெங்காயம் வந்து உள்ளது. தட்டுப்பாடு நீங்கியதால் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை ஆனது.
2. நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை, எனக்கு எப்படி அதன் விலை பற்றி தெரியும் ; மத்திய மந்திரி கருத்தால் சர்ச்சை
நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை, எனக்கு எப்படி அதன் விலை பற்றி தெரியும் என்று மத்திய மந்திரி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
3. கடும் விலை உயர்வு: நிதி அமைச்சர் வெங்காயம் சாப்பிடாமல், வெண்ணெய் பழம் சாப்பிடுகிறாரா? ப.சிதம்பரம் கேள்வி
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிடாமல், வெண்ணெய் பழம் சாப்பிடுகிறாரா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
4. கூடுதலாக 50 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விளைச்சல்: ‘தமிழகத்தில் வெங்காய விலை கட்டுக்குள் கொண்டு வரப்படும்’
தமிழகத்தில் கூடுதலாக 50 ஆயிரம் ஏக்கரில் வெங்காயம் விளைச்சல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அவற்றின் விலை கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் தோட்டக்கலைத்துறை இயக்குனர் டாக்டர் என்.சுப்பையன் தெரிவித்தார்.
5. தஞ்சையில் சின்னவெங்காயம் - பல்லாரி விலை கடும் உயர்வு கிலோ ரூ.160-க்கு விற்பனை
தஞ்சையில் சின்னவெங்காயம் - பல்லாரி விலை கடுமையாக உயர்ந்து கிலோ ரூ.160-க்கு விற்பனையானது.