உள்ளாட்சி தேர்தலுக்காக களமிறங்கிய அ.தி.மு.க : சுகாதாரத்துறை அமைச்சர் திண்ணை பிரசாரம்


உள்ளாட்சி தேர்தலுக்காக களமிறங்கிய அ.தி.மு.க : சுகாதாரத்துறை அமைச்சர் திண்ணை பிரசாரம்
x
தினத்தந்தி 4 Nov 2019 3:17 PM IST (Updated: 4 Nov 2019 3:17 PM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்காக சுகாதாரத்துறை அமைச்சர் திண்ணை பிரசாரம் மேற்கொண்டார்.

புதுக்கோட்டை 

தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், புதுக்கோட்டை நகரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

முன்னதாக புதுக்கோட்டை அசோக்நகர் அருகே உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட அதிமுக சார்பில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய விஜயபாஸ்கர்,எப்போது வேண்டுமானாலும் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கும் என கூறினார்.

தொடர்ந்து  42-வது வார்டு மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் நிறைகுறைகளை அமைச்சர் கேட்டறிந்தார். பொதுமக்கள், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் அமைச்சரிடம் கொடுத்தனர். தேர்தல் தேதி இன்னும் வெளியாகாத நிலையில், முன்னேற்பாடாக அ.தி.மு.க அமைதியாக பிரசாரத்தில் களமிறங்கியுள்ளது.

Next Story