15 நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு - ஓ.பன்னீர்செல்வம்


15 நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு - ஓ.பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 5 Nov 2019 9:30 PM IST (Updated: 5 Nov 2019 9:30 PM IST)
t-max-icont-min-icon

இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்றதற்காக அதிமுக சார்பில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. 

இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சித்தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.  நாங்குநேரி தொகுதி மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்த உள்ளோம் என்றார்.

Next Story