மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
மேட்டூர் அணைக்கு இரண்டாவது நாளாக நீர்வரத்து குறைந்துள்ளது.
மேட்டூர்,
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைய தொடங்கியுள்ளது.
நேற்று 7500 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 6000 கனஅடியாக குறைந்துள்ளது.
இதனையடுத்து அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனம் மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு 7000 கன அடியில் இருந்து 5000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. மேலும் அணையில் தற்போது 93.47 டிஎம்சி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது.
Related Tags :
Next Story